New - DetailPage - DMK
header_right
கழகத் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில், கரூர் மாவட்டம் - தாந்தோணி ஒன்றிய அதிமுக பெருந்தலைவர் திருமதி வி.சிவகாமி வேலுச்சாமி, தாந்தோணி மேற்கு ஒன்றியச் செயலாளர் எஸ்.வேலுச்சாமி ஆகியோர் திமுகவில் இணைந்தனர்.

பதிவு: 20 Oct 2021, 10:54:28 மணி

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்,
கழகத் 
தலைவர் அவர்கள் முன்னிலையில்
கரூர் மாவட்டம்,
அ.தி.மு.க.வைச் சேர்ந்த
தாந்தோணி ஒன்றியப் பெருந்தலைவர் திருமதி வி.சிவகாமி வேலுச்சாமி
தாந்தோணி மேற்கு ஒன்றியச் செயலாளர் எஸ். வேலுச்சாமி  ஆகியோர்
தி.மு.க.வில் இணைந்தனர்.
 
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், இன்று (19.10.2021) மாலை,  கரூர் மாவட்டம், அ.தி.மு.க.வைச் சேர்ந்த தாந்தோணி ஒன்றியப் பெருந்தலைவர் திருமதி வி.சிவகாமி வேலுச்சாமி மற்றும் தாந்தோணி மேற்கு ஒன்றியச் செயலாளர் எஸ்.வேலுச்சாமி ஆகியோர் தி.மு..வில் இணைந்தனர்.
   
அதுபோது  கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் மாண்புமிகு கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., மாண்புமிகு பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, கரூர் மாவட்டக் கழகப் பொறுப்பாளர் மாண்புமிகு வி.செந்தில்பாலாஜி, துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, தலைமை நிலையச் செயலாளர்கள் துறைமுகம் காஜா, பூச்சி எஸ்.முருகன், குளித்தலை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம், அரவக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ, கிருஷ்ணராயபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி ஆகியோர் உடனிருந்தனர்.
***